×

புரோ லீக் கபடி புனேரி பால்டனுடன் இன்று தமிழ் தலைவாஸ் மோதல்

பெங்களூரு:பெங்களூருவில் 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் பாட்னா பைரட்ஸ் அணி 38-30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. இதுவரை 19 ஆட்டங்களில் ஆடியுள்ள பாட்னா அணி 14 வெற்றி, ஒரு டை, 4 தோல்வி என்று 75 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன், ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்றையும் உறுதி செய்துவிட்டது. பாட்னா அணியில் அதிகபட்சமாக சச்சின் 14 புள்ளி எடுத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி. யோத்தா அணி 44-28 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 9-வது வெற்றியை பதிவு செய்தது. பர்தீப் நார்வல் 14 புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 31 புள்ளிகள் எடுத்தது. இதையடுத்து ஆட்டம் டிராவானது. இன்றைய லீக் ஆட்டங்களில் இரவு 7.30 மணிக்கு யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், 8.30 மணிக்கு பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகளும், 9.30 மணிக்கு புனேரி பால்டன்- தமிழ் தலைவாஸ் அணிகளும் மோதுகின்றன.

Tags : Tamil Talawas ,Pro League ,Kabaddi ,Puneeri Baltan , Pro League Kabaddi, Tamil Talawas clash with Puneeri Baltan
× RELATED மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி