×

ஸ்தம்பிக்க வைத்த போராட்டம் : கனடாவில் 1970க்கு பிறகு அவசர நிலை பிரகடனம்... தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ!!

கனடா : கனடாவில் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவிற்கு தீவிரம் அடைந்துள்ள டிரக் ஓட்டுனர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசரகால சட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வாரங்களுக்கு மேலாக கனடாவில் சரக்கு லாரி ஓட்டுனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களில் டிரக் ஓட்டுனர்கள் தடைகளை ஏற்படுத்தி இருப்பதால் கனடாவுக்குள் வாகனங்களால் செல்ல முடியவில்லை.

சரக்கு போக்குவரத்து முடங்கியதால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கனடாவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பிரதமர் ட்ரூடோ பல முறை எச்சரித்தும் போராட்டத்தை கைவிட ட்ரக் ஓட்டுனர்கள் தயாராக இல்லை. இந்த நிலையில் ட்ரக் ஓட்டுனர்களுக்கு ஆதரவாக மக்களும் போராட்டத்தில் குதித்ததால் கனடாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த நிலையில் ஒட்டாவில் பேசிய பிரதமர் ஜஸ்டின், நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர அவசரகால சட்டத்தை செயல்படுத்தி இருப்பதாக கூறினார்.

அதன்படி போராட்டக்காரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களது லாரிகள் பறிமுதல் செய்யப்படும். ட்ரக்குகள் சார்ந்த கார்ப்பரேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். வாகனங்களின் இன்சூரன்ஸ் நிறுத்தி வைக்கப்படும். மேலும் போராட்டக்காரர்களால் போக்குவரத்து முடக்கிவைக்கப்பட்டுள்ள பாலங்களை உடனடியாக திறக்கவும் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன் ஒரு முறை மட்டுமே கனடாவில் அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1970ம் ஆண்டு முன்னாள் பிரதமரும் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையுமான பிரதமர் பியரே ட்ரூடோ அவசரகால சட்டத்தினை அமல்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Canada ,Justin Trudeau , Canada, Larry, Drivers, Prime Minister, Justin Trudeau
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கான...