×

கிறிஸ்தவர்களுக்கு தனி சுடுகாடு: கலெக்டரிடம் மனு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகள் இயங்குகின்றன. இதில் உறுப்பினர்களாக இருக்கும் கிறிஸ்தவ மக்களை, அவர்கள் இறந்தபின், செங்கல்பட்டு அருகே உள்ள பெத்தேல் நகரில் பல ஆண்டுகளாக அடக்கம் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், ஜேசிகே நகரை சேர்ந்த கிறித்தவ பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய சென்றபோது, அப்பகுதித மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலையானது. இதையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசார், இரு தரப்பினரிடம் சமரசம் பேசி, உடலை அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு நகரில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், கலெக்டர் ராகுல்நாத்திடம், கோரிக்கை மனு அளித்தனர். அதில், செங்கல்பட்டு நகரில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு தனியாக சுடுகாடு இல்லை. இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, கிறிஸ்தவர்களுக்கு தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் அல்லது பெத்தேல் நகரில் உள்ள சுடுகாட்டில் கிறிஸ்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து, இடம் ஒதுக்கி தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Christians , Separate cremation for Christians: Petition to Collector
× RELATED புனித வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ...