×

வடக்கு கொரட்டூர் பகுதியில் நூலகம் அமைத்து தருவேன்: திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் உறுதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம், 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ், நேற்று வடக்கு கொரட்டூர் பகுதிகளான பெருமாள் கோயில் தெரு, பள்ளத்தெரு ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, வேட்பாளர் உஷா நாகராஜ் பொதுமக்களிடம் கூறுகையில், ‘‘அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் வடக்கு கொரட்டூர் பகுதியில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். மக்கள் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காண்பேன். எனவே, எனக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், வட்ட செயலாளர்கள் சீ.லோகநாதன், மு.விஜயகுமார், பகுதி நிர்வாகிகள் பொற்செழியன், ராஜ்குமார், பாபு இளஞ்செழியன், லெட்சுமி, மோகன்குமார், முருகன், பிரகாசம், கோவிந்தன், தவமணி, கிருஷ்ணன், எம்.டில்லிபாபு, முத்து, செல்வம், அமிர்தலிங்கம் சிவராமன், கு.டில்லிபாபு ஸ்ரீநாத், ஜெயபால், கண்ணன், திருநாவுக்கரசு, உஷா, தரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : North Korattur ,DMK ,Usha Nagaraj , I will set up a library in North Korattur: DMK candidate Usha Nagaraj confirms
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி