×

வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு மனு இன்று விசாரணை

புதுடெல்லி: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று இறுதி விசாரணையாக மேற்கொள்கிறது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ‘சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். எனவே வன்னியர் சமூகத்திற்கான உள் இடஒதுக்கீடு செல்லாது’ என உத்தரவிட்டு, அதுகுறித்த அரசாணையையும் ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் மாநில உயர்கல்வித்துறை, ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்தும் தரப்பும் ஒருங்கிணைந்த எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஒருங்கிணைந்த வாதங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று மேற்கொள்கிறது.

Tags : Vanni , 10.5% internal reservation petition for Vanniyars to be heard today
× RELATED சட்ட போராட்டம் நடத்தி...