×

ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் விண்ணில் பாய்ந்த ராக்கெட்டை ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்

ஆம்பூர்: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கை கோளான ஈஓஎஸ்-04 என்ற செயற்கைகோளை பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட் மூலம் இன்று காலை 5.59 மணிக்கு ஏவப்படும் என அறிவித்தது. இதற்கான 25 மணி 30நிமிட கவுன்டவுன் நேற்று காலை தொடங்கியது. திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 5.59மணிக்கு பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பின்னர் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

விண்ணில் ராக்கெட் சீறிபாய்ந்தபோது அதில் இருந்து வெளியேறிய தீப்பிழம்பு, தீப்பந்துபோல் தெரிந்தது. மேலும் ராக்கெட்டில் இருந்து வெளியேறிய வெண்ணிற புகையும் நீண்டநேரமாக வானில் தெரிந்தது. வானம் தெளிவாக காணப்பட்டதால் முதல்முறையாக ஆம்பூர், வாணியம்பாடி, கேத்தாண்டப்பட்டி ஜோலார்பேட்டை, குப்பம், பேரணாம்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வானில் அதிசய வால்மீன் செல்வதாக நினைத்து ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் ராக்கெட் சென்றதை அறிந்து பொதுமக்கள் ஒருவருக்கொருவர் ஆச்சரியத்துடன் தெரிவித்துக்கொண்டனர். இதேபோல் வேலூர், செய்யாறு உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

Tags : Ambur ,Vaniyambadi , Ambur, Vaniyambadi, Sky, Rocket
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...