×

பாஜவின் கிளைக் கழகம் அதிமுக கொ.பி.செயலாளர் எடப்பாடி : ஜவாஹிருல்லா எம்எல்ஏ தாக்கு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் மற்றும் திமுக வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத்தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா நேற்று பிரசாரம் செய்தார். ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில் நேற்று இரவு நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் குறித்த பிரச்னைகளில் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார் முதல்வர்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இல்லாவிட்டாலும் கூட பாஜவின் கொள்கை பிரசார செயலாளராகவே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் ஒரே அரசு தான் இருக்க வேண்டும். மாநில அரசுகளை ஒழித்துவிட்டு, முனிசிபாலிட்டிகளை போல மட்டுமே அவை செயல்பட வேண்டும் என திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது ஒன்றிய பாஜ அரசு. அதையே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, 2024ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தலும் வரும் என எல்லா இடங்களிலும் கூறி வருகிறார்.இதன் மூலம், பாஜவின் கிளைக் கழகமாக அதிமுக மாறிவிட்ட அவல நிலையை நாம் உணர முடியும். எனவே, நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்.


Tags : Baja's Clicking Club High ,GP ,Etabadi ,Jawahiralla ,MLA , Baja, Branch, AIADMK, Edappadi, Jawaharlal Nehru
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி