மதுரை மாவட்டம் மேலூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்: பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுரை மாவட்டம் மேலூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பரப்புரை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், மதுரையை லண்டன், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார்கள்; ஆனால் மதுரையை சிதைத்துள்ளார்கள். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்தும் விசாரிக்கப்படும் என்றார்.

Related Stories: