×

சித்தையன்கோட்டையில் 10 பேரை கடித்து குதறிய நாய் கூட்டம்-இறைச்சிக்கழிவுகள் அகற்றப்படுமா?

சின்னாளபட்டி : ஆத்தூரிலிருந்து சித்தையன்கோட்டை வரும் வழியில் உள்ள குளம் அருகே பொதுக்கழிப்பறை உள்ளது. இதைச்சுற்றி குப்பைக்கழிவுகள், இறைச்சி கழிவுகள் குவிந்து வருகின்றன. அவற்றை உண்பதற்காக வரும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சேடபட்டியை சேர்ந்த இடையம்மாள் (92) என்ற மூதாட்டியை 6க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறின. இதில் அவருக்கு கை, கால்கள், தொடையில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 இதுபோல கூலம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி, செம்பட்டி காளிதாஸ், ஆத்தூர் ராணி, ஆகியோரும் நாய்கடியால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக னுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தையன்கோட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள குளத்தை சுற்றி குவித்து வைத்துள்ள குப்பை கழிவுகள், மற்றும் இறைச்சி கழிவுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sithayankottai , Chinnalapatti: There is a public toilet near the pond on the way from Attur to Sithayankottai. Garbage around it, meat
× RELATED சித்தையன்கோட்டையில் கழிவுநீர் வாறுகால்களில் தூர்வாரும் பணி