×

அதிமுக இல்லாமல் போட்டியிடுவதால் பாஜ, அதிமுக பலம் அதிகரிக்கும்: பொன்னார் ஆரூடம்

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடலூர், தஞ்சை என பல மாவட்டங்களை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். இம்முறை விருதுநகர் நகர்மன்ற தேர்தலில் பாஜ அதிக இடங்களில் வெற்றி பெறும். கு.க.செல்வம் பாஜவில் இருந்து வெளியேறி தாயின் கருவறைக்கு சென்று இருப்பதாக கூறுகிறார். அவரின் விமர்சனத்தை பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டாம். அதிமுக, பாஜ கூட்டணி முறிந்து போகவில்லை. இந்த தேர்தலில் அதிமுக, பாஜ இருவரும் அவரவர் பலத்தை பெருக்க தனித்து போட்டியிடுகிறோம்’’ என்றார்.


Tags : Bonnar , BJP will increase AIADMK strength by contesting without AIADMK: Ponnar Arudam
× RELATED அதிமுக இல்லாமல் போட்டியிடுவதால் பாஜ,...