×

மீனவர்கள் கைது டிடிவி.தினகரன் கடும் கண்டனம்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் டிவிட்டர் பதிவு: தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம். தனுஷ்கோடி அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்கசெய்வதுடன், இனி இந்த அவலம் தொடராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Tags : DTV.Dhinakaran , Fishermen arrested DTV.Dhinakaran strongly condemned
× RELATED பெரியகுளத்தில் நடந்தது ஓ.பி.எஸ் மனைவி...