×

தீபிகா படுகோன் படத்துக்கு கங்கனா கடும் எதிர்ப்பு

மும்பை: கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான இந்தி படம், ‘கெஹ்ரையான்’. இதில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி, தஹரியா கர்வா நடித்துள்ளனர். ஷாகுன் பத்ரா இயக்கியுள்ளார். இது திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டு கெதராக வாழும் இரண்டு தம்பதிகளுக்குள் ஏற்படுகின்ற கள்ளக்காதல் பற்றிய கதை. இப்படம் குறித்து கங்கனா ரனவத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘நானும் இந்த தலைமுறையை சேர்ந்தவள்தான். மில்லினியல் வகையான காதலை நான் அடையாளம் கண்டு புரிந்துகொள்கிறேன். ஆனால், தயவுசெய்து நியூ ஏஜ், நவீன திரைப்படம் என்ற
பெயரில் குப்பைகளை விற்க வேண்டாம். தரமற்ற திரைப்படங்கள் எப்போதும் தரமற்றவைதான். எந்த வகையான ஆபாசத்தை காட்டியும் அந்தப் படத்தை காப்பாற்ற முடியாது. இது அடிப்படை உண்மை. ‘கெஹ்ரையான்’ படத்தில் எந்தவிதமான ஆழமான கருத்து களும் சொல்லப்படவில்லை’ என்று எழுதியுள்ளார்.


Tags : Gangana ,Deepika Padukone , Gangana strongly opposes Deepika Padukone movie
× RELATED மக்களவை தேர்தலால் பிரபாஸ் படத்துக்கு சிக்கல்