×

ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த 12 மீனவர்கள் சிறைபிடிப்பு; இரண்டு படகுகளும் பறிமுதல்: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை தடுத்து, அங்கிருந்து விரட்டியடித்தனர். அச்சமடைந்த மீனவர்கள் படகுகளை வேறு பகுதிகளுக்கு ஓட்டிச் சென்றனர். இருப்பினும் விடாமல் விரட்டி வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளில் இருந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்தனர்.

அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு நேற்று அதிகாலை அழைத்துச் சென்றனர். அங்கு மீனவர்களிடம் இலங்கை கடற் படை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டிவழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை சிறையில் உள்ள நிலையில், தற்போது சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். நீதிபதி சிவபாலன், அனைவரையும் பிப். 25ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Rameswaram ,Thangachimadam , Capture of 12 fishermen from Rameswaram, Thangachimadam areas; Two boats confiscated: Sri Lankan navy recaptured
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...