×

மதுராந்தகத்தில் மலர்விழிகுமாருக்கு ஆதரவாக நடிகர் போஸ் வெங்கட் தீவிர பிரசாரம்: திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியில் 17வது வார்டில் முன்னாள் நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், 21வது வார்டில் ஷகிலா பானு ஆகியோரை ஆதரித்து திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் திமுகவின் சாதனைகளை கூறி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுராந்தகம் நகராட்சியில் 17வது வார்டில் திமுக சார்பில் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் நகரமன்ற தலைவர் மலர்விழிகுமார் முருகன் கோயில் தெரு, வடராயன் தெரு, தேரடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அப்பகுதி பெண்களுடன் சேர்ந்து ஊர்வலமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இதோபோல், 21வது வார்டு நகரமன்ற உறுப்பினர்  பதவிக்கு போட்டியிடும் ஷகிலா பானு ஆனந்த் நகர், பார்த்தசாரதி தெரு, பஜார் பகுதி, ஹாஸ்பிடல் ரோடு  உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்கள் தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம்  உதயசூரியன் சின்னத்திற்கு நேற்று வாக்குகள் சேகரித்தனர். மலர்விழிகுமார், ஷகிலா பானு ஆகிய இருவருக்கும் ஆதரவாக, திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் வீதிவீதியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசுகையில், ‘அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி ரூ. 4 ஆயிரம், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் திட்டம் உள்ளிட்ட திமுக சாதனைகளை பட்டியலிட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, நகர செயலாளர் குமார், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Bose Venkat ,Malarvizhikumar ,Madurantakam ,DMK , Actor Bose Venkat's intense campaign in support of Malarvizhikumar in Madurantakam: DMK collects votes for achievements
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் போஸ். வெங்கட் பிரசாரம்