×

வடக்கு கொரட்டூர் பகுதியில் சாலை, வடிகால் வசதி செய்வேன்: திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் பிரசாரம்

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம், 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ், நேற்று வடக்கு கொரட்டூர் பகுதிகளான சீனிவாசபுரம், நியூ காலனி, சிவலிங்கபுரம் ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். மக்கள் மத்தியில் வேட்பாளர் உஷா நாகராஜ் பேசுகையில், ‘‘அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் வடக்கு கொரட்டூர் பகுதியில் சாலை, மழைநீர் வடிகால் வசதிகளை செய்து கொடுப்பேன்.

எனவே, எனக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், வட்ட செயலாளர்கள் சீ.லோகநாதன், மு.விஜயகுமார், பகுதி நிர்வாகிகள் பொற்செழியன், ராஜ்குமார், பாபு இளஞ்செழியன், லெட்சுமி, மோகன்குமார், முருகன், பிரகாசம், கோவிந்தன், தவமணி, கிருஷ்ணன், எம்.டில்லிபாபு, முத்து, செல்வம், அமிர்தலிங்கம் சிவராமன், கு.டில்லிபாபு ஸ்ரீநாத், ஜெயபால், கண்ணன், திருநாவுக்கரசு, உஷா, தரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : North Korattur ,DMK ,Usha Nagaraj , I will make road and drainage facilities in North Korattur area: DMK candidate Usha Nagaraj campaign
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...