ஆலந்தூர் மண்டல திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பிரசாரம்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 161, 164, 166, 167வது வார்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று  ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, நங்கநல்லூர் வோல்டாஸ் காலனியில் 166வது வார்டு வேட்பாளர் என்.சந்திரன், 167வது வார்டு வேட்பாளர் துர்காதேவி நடராஜன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்த பகுதி மக்களுக்கு கூட்டு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன், பழைய டிரான்ஸ்பார்மர்களை மாற்றி புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிரான்ஸ்பார்மரை அமைத்து தருவேன், பறக்கும் ரயில் திட்ட பணிகளை 8 மாதத்தில் முடித்து தருவேன்.

உங்கள் பகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த திமுகவுக்கு வாக்களியுங்கள்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, திமுக வேட்பாளர்கள் ரேணுகா சீனிவாசன் (161வது வார்டு), தேவி ஏசுதாஸ் (164வது வார்டு), மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ரவி, துணை தலைவர் பிரகாஷ். ஒன்றிய மாணவரணி ஜி.கே.பிரபாகர்,   வட்ட திமுக நிர்வாகிகள் எல்.காசி ஸ்ரீகாந்த், அபிஷேக், இ.உலகநாதன், வெள்ளைச்சாமி, செல்வம், மாரிமுத்து, வேல்முருகன், கேபிள் ராஜா, விக்னேஷ், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அய்யம்பெருமாள், ராதாகிருஷ்ணன், மற்றும் நல சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: