×

புரோ லீக் கபடி; புனேரி பால்டன் அபார வெற்றி

பெங்களூரு: பெங்களூரில் 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தபாங் டெல்லி  அணிகள் மோதின. இதில் தபாங் டெல்லி 32-31 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை தோற்கடித்தது. வழக்கம்போல் தமிழ் தலைவாஸ் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தில் தோல்வியடைந்தது. யு மும்பா - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா 37-27 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் புனேரி பால்டன் 51-31 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை எளிதில் வென்றது. இன்று இரவு 7.30 மணிக்கு அரியானா டீலர்ஸ்-யு.மும்பா அணிகளும், 8.30 மணிக்கு பெங்களூர் புல்ஸ்- பிங்க் பேந்தர்ஸ் அணிகளும், 9.30 மணிக்கு உ.பி. யோத்தா-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Tags : Pro ,Kabaddi ,Puneeri Bolton , Pro League Kabaddi; Puneeri Bolton won by a landslide
× RELATED சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம்...