தமிழக வீரர்களை ஏலம் எடுக்க முனைப்பு காட்டாத சிஎஸ்கே!

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற முதல் நாள் ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை பஞ்சாப் அணி ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஷாருக்கானை எடுக்க சென்னை, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ரூ.20 லட்சத்தில் தொடங்கிய ஏலம், படிப்படியாக உயர்ந்தது. சென்னை அணி ரூ.8 கோடி ரூபாய் வரை மோதிப்பார்த்தது. ஆனால், விடாமல் துரத்திய பஞ்சாப் இறுதியில் ரூ.9 கோடிக்கு ஷாருக்கானை தன்வசப்படுத்தியது. இதனால், சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையே ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு பேட்டிகளில் பேசிய அஸ்வின் சென்னை அணிக்கு திரும்ப விருப்பம் உள்ளதாகவும், சொந்த மாநில அணிக்காக விளையாடுவது என்பது ஆசை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் அவரை ஏலம் கேட்க சென்னை அணி கடைசி வரை ஒரு முறைகூட முயற்சிக்கவில்லை. மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கை பெங்களூரு அணி ரூ.5.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரை ஏலம் எடுக்க ஆரம்ப கட்டத்தில் முயற்சி செய்த சிஎஸ்கே நிர்வாகம், ஏலத்தொகை ரூ.5 கோடி ரூபாயைக் கடந்ததும் கப்சிப் ஆனது. அதன்பின்னர் தினேஷ் கார்த்திக்கை எடுக்க முனைப்பு காட்டவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சிஎஸ்கே ரசிகர்கள், தமிழக வீரர்களை எடுப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்வம் காட்டாதது ஏன்? என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: