திருப்புத்தூரில் வாக்குச்சாவடிகளில் எஸ்பி ஆய்வு

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் வாக்குச்சாவடி மையங்களை எஸ்பி செந்தில்குமார் ஆய்வு செய்தார். திருப்புத்தூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக புதுப்பட்டி லிம்ரா மெட்ரிக் பள்ளி, தென்மாபட்டு செந்தமிழ் பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை நேற்று முன்தினம் இரவு எஸ்பி செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வாக்குச்சாவடி மையங்களின் நிலை, வாக்காளர்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் திருப்புத்தூர் டிஎஸ்பி ஆத்மநாதன், டவுன் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், எஸ்ஐ மலைச்சாமி, போக்குவரத்து எஸ்ஐ கண்ணன், தனிபிரிவு போலீசார் ஆகியோர் இருந்தனர்.

Related Stories: