மத்தியப் பிரதேசத்தில் மண் சரிவில் சிக்கிய 9 தொழிலாளர்கள்: 7 பேரை மீட்ட பேரிடர் மீப்புக்குழு; இதர 2 பேரை மீட்க முயற்சி

போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாதாள கால்வாய் திட்ட கட்டுமான பணி நடந்த போது மண் சரிவு ஏற்பட்டு 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 7 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 2 பேரின் கதி தெரியவில்லை. கட்னி மாவட்டத்தில் உள்ள நர்மதா நதியின் வலது கரையில் பாதாள கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று மாலை தொழிலாளர்கள் பணியில் இருந்த போது மண் சரிவு ஏற்பட்டு பாதாள கால்வாய் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 9 பேர் சிக்கிக் கொண்டனர்.

மாநில பேரிடர் மீட்பு படைகள் வரவழைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதிகாலை வரை 7 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். எஞ்சிய 2 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: