நக்சல்களுக்கு நிதி உதவி: 4 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில்  நக்சலைட்டுகள் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இந்த  தாக்குதலை நடத்துவதற்காக அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பு நிதி உதவி அளித்து வருவதாக என்ஐஏ  எனப்படும் தேசிய புலனாய்வு குழுவுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்து வரும் என்ஐஏ   அதிகாரிகள், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் 26 இடங்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகளில்  நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.  இதில் 3 நாட்டு துப்பாக்கிகள், ஒரு ரைபிள், துப்பாக்கி தோட்டாக்கள், டிஜிட்டல் கருவிகள், 4 கிலோ போதை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: