×

பயணிகள் க்யூ-ஆர் கோடு ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற ‘ஆப்’ மூலம் ரயில் டிக்கெட் பெறலாம்: க்யூ-ஆர் கோடு மூலம் சீசன் டிக்கெட் புதுப்பித்தால் 0.5% சலுகை; தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பயணிகள் க்யூ-ஆர் கோடு ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட், மின்சார ரயில் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரயில் நிலையத்தில் தனித்தனியாக கவுன்டர்கள் இருந்த போதிலும் கூட்ட நெருக்கடி ஏற்படும் போது டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரத்தை ஒவ்வொரு டிக்கெட் வழங்கும் கவுன்டர் அறை அருகே வைத்துள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இந்நிலையில் மேலும் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரத்தில் க்யூ ஆர் கோடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் க்யூ-ஆர் கோடு ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இந்த க்யூ ஆர் கோடு வசதி மூலம் சீசன் டிக்கெட்டை பெற புதுப்பித்தால் பயணிகளுக்கு 0.5 சதவீதம் சலுகை கொடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Southern Railway , Passengers can scan the QR code and get train tickets through ‘App’ like G-Pay, Phone-Pay: 0.5% discount on season ticket renewal with QR code; Southern Railway Notice
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...