பாமகவில் இருந்து கே.சரவணன் நீக்கம்: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: பாமக வேலூர் மாவட்ட துணைத் தலைவர் கே.சரவணன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ெவளியிட்ட அறிக்கை: வேலூர் மாநகரத்தை சேர்ந்த வேலூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் கே.சரவணன் பாமக நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால் நேற்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். அவருடன் பாமகவினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: