×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கே.பாலகிருஷ்ணன் உட்பட தலைவர்கள் பிரசார பட்டியல் வெளியீடு: தலைமை அறிவிப்பு

சென்னை: சிபிஐஎம் வெளியிட்ட அறிக்கையில்: மாநில செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் பிரசார குழுவின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் 13,14ம் தேதிகளில் சென்னையிலும், 15ம் தேதி திருப்பூர், 16ம் தேதி திண்டுக்கல், 17ம் தேதி கடலூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் 14ம் தேதி கன்னியாகுமரி, 15ம் தேதி கோவை, 17ம் தேதி தென்காசியிலும், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் 14ம் தேதி தஞ்சாவூர், 16ம் தேதி தென்சென்னை, மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடலூரிலும், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் இன்று வேலூர், 14, 15ம் தேதிகளில் சேலம், 16ம் தேதிகளில் வடசென்னை, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது 13ம் தேதி 17ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் இன்று மதுரை, 14ம் தேதி விருதுநகர், 15ம் தேதி மதுரை, 16ம் தேதி விருதுநகர், 17ம் தேதி மதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் லாசர் இன்று மற்றும் நாளை திருச்சி புறநகர், 15 முதல் 17ம் தேதி வரை தேனி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் 15ம் தேதி நாகப்பட்டினம், 16ம் தேதி மயிலாடுதுறை, மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் இன்று மற்றும் நாளை நெல்லை, 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மத்திய சென்னை, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் 14ம் தேதி திண்டுக்கல், பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

Tags : Urban Local Election ,Palakrishnan , Release of campaign list of leaders including K. Balakrishnan for urban local elections: Leadership announcement
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்...