ஒரே நாடு, ஒரே தேர்தல் வீண் கனவு: களக்காட்டில் அமைச்சர் ராஜகண்ணப்பன் விளாசல்

களக்காடு: களக்காடு நகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூ, மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து களக்காடு காந்திவீதியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் திமுக ஆட்சியை அசைக்க முடியாது. 80 சதவீத மக்கள் திமுக பக்கம் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுத்து வருகிறார். தமிழகத்தில் பாஜ வளரவே வளராது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் வீண் கனவு. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி திமுக. 10 ஆண்டுகளாக தமிழகத்தை அதிமுகவினர் குட்டிசுவராக்கி விட்டார்கள்’’ என்றார்.

Related Stories: