×

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிகபட்ச தொகை.. இந்திய வீரர் இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்

பெங்களூரு: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களுருவில் தொடங்கியது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன், மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.

* ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

*தமிழக வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

*ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

*தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவை ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
 
*நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ரூ. 8 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

*இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

* இந்திய அணி வீரர் முகமது ஷமியை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

*தென்னாப்பிரிக்க அணி வீரர் ஃபாஃப் டூ ப்ளசிஸை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

*தென்னாப்பிரிக்க அணி வீரர் குவிண்டன் டி காக் ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

*ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி.

*மேற்கு இந்திய திவுகள் அணி வீரர் ஷிம்ரன் ஹெட்மயரை ரூ.8.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

*இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

*இந்திய வீரர் மணீஷ் பாண்டேவை ரூ.4.60 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

*மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

*இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

*இந்திய அணி வீரர் நிதிஷ் ராணாவை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

*மேற்கு  இந்திய தீவுகள் அணி வீரர் டுவெய்ன் ப்ராவோவை ரூ.4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

*இந்திய அணி வீரர் தேவ்தத் படிக்கலை ரூ.7.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ்

*நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் வாங்க முன் வராததால் ஏமாற்றம்; சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்!

*இந்திய வீரர் ஹர்ஷல் படேல்-ஐ, ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை!

*ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)

*இந்திய வீரர் தீபக் ஹூடாவை ரூ.5.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது RCB அணி!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தரை, ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவை, ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)

*ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ், ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவை ரூ. 6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது CSK அணி

*ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேடை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷன், ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது  மும்பை இந்தியன்ஸ் அணி!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரித்திமான் சாஹாவை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)

*ஐபிஎல் மெகா ஏலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன், ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!

*இந்திய அணி வீரர் நடராஜன் ரூ. 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணி வீரர் தீபக் சஹார், ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் உமேஷ் யாதவ் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)

*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணி வீரர் பிரசித் கிருஷ்ணா, ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஸ் ஹேசல்வுட், ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன்,  ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்!


Tags : IPL ,Auction ,Mumbai Indians ,Ishan Kishan , மும்பை இந்தியன்ஸ்,இஷான் கிஷன்,ஃபாஃப் டூ ப்ளசிஸ்
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்