×

கொல்லிமலை வாசலூர்பட்டி படகு இல்லத்தை சீரமைக்க வேண்டும்-சுற்றுலா பயணிகள் கோரிக்கை

சேந்தமங்கலம் : கொல்லிமலை வாசலூர்பட்டி படகு இல்லத்தை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் கொல்லிமலைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து விட்டு கொல்லிமலையில் விளையும், பலா, அன்னாசி, வாழை, கொய்யா உள்ளிட்ட பழங்களை வாங்கிச் செல்கின்றனர். கொல்லிமலையில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு மையமான வாசலூர்பட்டி படகு இல்லத்தில் 10க்கும் மேற்பட்ட படகுகளில், சுற்றுலா பயணிகள் சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் சவாரி செய்து வந்தனர்.

இதனிடையே, கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வாசலூர்பட்டி படகு இல்லம் முறையாக பராமரிக்கப்படாததால், இங்குள்ள படகுகள் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள சிமெண்ட் படிக்கட்டுகள் இடிந்துள்ளது. இதனால், படகு இல்லம் மூடப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் இருந்து கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வாசலூர்பட்டியில் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, இந்த படகு இல்லத்தை சீரமைக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kollimalai Vasalurpatti , Sainthamangalam: Tourists have demanded that the Kollimalai Vasalurpatti boat house be renovated. Namakkal
× RELATED கொல்லிமலை வாசலூர்பட்டி படகு இல்லத்தை...