×

ஐபிஎல் மெகா ஏலம் : இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி!!

பெங்களூரு: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களுருவில் தொடங்கியது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன், மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.

* ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

*தமிழக வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

*ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

*தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவை ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
 
*நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ரூ. 8 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

*இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

* இந்திய அணி வீரர் முகமது ஷமியை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

*தென்னாப்பிரிக்க அணி வீரர் ஃபாஃப் டூ ப்ளசிஸை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

*தென்னாப்பிரிக்க அணி வீரர் குவிண்டன் டி காக் ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

*ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி.

*மேற்கு இந்திய திவுகள் அணி வீரர் ஷிம்ரன் ஹெட்மயரை ரூ.8.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

*இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

*இந்திய வீரர் மணீஷ் பாண்டேவை ரூ.4.60 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

*மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

*இந்திய அணி வீரர் நிதிஷ் ராணாவை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

*மேற்கு  இந்திய தீவுகள் அணி வீரர் டுவெய்ன் ப்ராவோவை ரூ.4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

*இந்திய அணி வீரர் தேவ்தத் படிக்கலை ரூ.7.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ்

*நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் வாங்க முன் வராததால் ஏமாற்றம்; சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்!

*இந்திய வீரர் ஹர்ஷல் படேல்-ஐ,  ₹10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

*ஐபிஎல் மெகா ஏலத்தில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை!

*ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)

Tags : IPL ,Auction ,Shreyas Iyer ,Kolkata , IPL, Mega, Auction, Shikhar Dhawan
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி