×

ஆந்திராவுக்கு சென்று திரும்பியபோது சாலை விபத்தில் வாலிபர் பலி: உறவினர்கள் மறியல்

ஊத்துக்கோட்டை: ஆந்திரா மாநிலத்தில் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியானார். நண்பர் கொன்று விட்டதாக இறந்தவரின் தந்தை கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி உறவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே கச்சூர் கிராமத்தில் வசித்தை சேர்ந்தவர் வெங்கடாதிரி. இவரது மகன் உதயா(19). இவரது நண்பர் அனந்தேரி பகுதி சேர்ந்த உதயகுமார்(20).

இருவரும், பென்னலூர்பேட்டை அருகே உள்ள ஆந்திர மாநிலத்தில் ஒரு கிராமத்தில் திருவிழாவிற்கு சென்று தெருக்கூத்து பார்த்து விட்டு இருவரும் அங்குள்ள மற்றொரு நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். அப்போது, வரும் வழியில் வெலம கண்டிகை பாளையத்தம்மன் கோயில் அருகே 9ம் இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டது.  ஆனால், அடிபட்ட காயத்துடன் இருவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதில், அனந்தேரி உதயகுமாரை அவரது தந்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கச்சூர் உதயா வீட்டிற்கு சென்றார். அப்போது அவரையும் அவரது தந்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ேநற்று முன்தினம் சிகிச்சை அளிப்பதற்குள் அவர் பலியானார். இதுகுறித்து உதயாவின் தந்தை வெங்கடாதிரி பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் எனது மகன் உதயாவை அவரது நண்பர் கொலை செய்து விட்டார் எனவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் புகார் செய்தார். ஆனால், இந்த புகாரை போலீசார் ஏற்கவில்லை என கூறி உதயாவின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு கச்சூர் கிராமத்தில் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தவலறிந்த பென்னலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். பின்னர், காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினர். இதை ஏற்று மறியல் கைவிடப்பட்டது. இதனால் கச்சூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 


Tags : Walibur ,Andhra , Valipar killed in road accident on his way back to Andhra Pradesh: Relatives stir
× RELATED நில உரிமை சட்டம் குறித்து தவறான...