×

தாதாங்குப்பம் பகுதிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் வாக்குறுதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம், 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ், நேற்று தாதாங்குப்பம் எஸ்.ஆர்.பி காலனியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் உஷா நாகராஜ் பொதுமக்களிடம் கூறுகையில், ‘அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் தாதாங்குப்பத்தில் மழைநீர் தங்கு தடையின்றி வெளியேற வடிகால் வசதி செய்து தருவேன். கழிவுநீர் வெளியேற சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுப்பேன்.

எனவே, எனக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், வட்ட செயலாளர்கள் சீ.லோகநாதன், மு.விஜயகுமார், நிர்வாகிகள் பொற்செழியன், பாபு இளஞ்செழியன், மோகன்குமார், ராஜ்குமார், பிரகாசம், முருகன், கல்யாணகுமார், அமர், கிருஷ்ணன், லோகேஷ், கருணாநிதி, குமார், நாகராஜ், தவமணி, லட்சுமி, உஷா, தரணி உள்பட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thadankuppam ,DMK ,Usha Nagaraj , To the Thadankuppam area Sewage treatment plant: DMK candidate Usha Nagaraj promises
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி