×

சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம்; சசிகலா, இளவரசி ஆஜராக சம்மன்: நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சொத்து  குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு அடைக்கப்பட்டனர். சசிகலாவும், இளவரசியும் தண்டனை காலம் முடிந்து கடந்தாண்டு விடுதலையாகினர். இந்நிலையில், சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு ₹2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் இருவரும் சிக்கினர்.

இது தொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமார், 2வது குற்றவாளியாக டாக்டர் அனிதா, 3வது குற்றவாளியாக சுரேஷ், 4வது குற்றவாளியாக கஜராஜ் மாகனூர், 5வது குற்றவாளியாக சசிகலா, 6வது குற்றவாளியாக இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு ேநற்று நீதிபதி லட்சுமி நாராயணபட்  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் அடுத்த மாதம் 11ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Tags : Sasigala ,Princess Ajarga Summon , Bribery for luxury facilities in prison; Sasikala summoned by Princess Azhar: Court order
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; கோவை...