டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் 2வது முறையாக நியமனம்

புதுடெல்லி:டாடா குழு நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவன தலைவராக கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த என். சந்திசேகரன் (58) நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, 2வது முறையாக சந்திரசேகரனின் பதவிக்காலத்தை நீட்டித்து டாடா குழுமம் மீண்டும் நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பாக டாடா சன்ஸ் நிறுவனம் விடுத்த அறிக்கையில், ‘கடந்த 11ம் தேதி நடந்த டாடா சன்ஸ் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் செயற்குழு தலைவர் சந்திரசேகரின் 5 ஆண்டு பணி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் ரத்தன் டாடா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

சந்திரசேகரனின் தலைமையின் கீழ் டாடா குழுமம் கடந்த 5 ஆண்டில் சிறப்பான வளர்ச்சி பெற்றதாக ரத்தன் டாடா பாராட்டினார். அவரது பரிந்துரையின் பேரில் என்.சந்திரசேகரனின் பதவிக்காலம் அடுத்த 5 ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: