×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதி மீறிய 25 பேர் மீது வழக்கு: மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை: பறக்கும்படை குழுக்கள் மூலமாக இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய 25 விதிமீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இவற்றில் சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக 12 புகார்களும், வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீ. தூரத்திற்குள் தேர்தல் அலுவலகம் அமைத்தது தொடர்பாக 4 புகார்களும், 20 பேருக்கு மேல் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக 3 புகார்களும், விளம்பரப் பலகைகள், கொடி தோரணங்கள், பேரணி, அனுமதி இன்றி பிரசாரம், விதிமுறைக்கு புறம்பான கூட்டம்,

பொதுமக்களுக்கு புடவை வழங்கியது போன்ற விதிமீறல்கள் தொடர்பாக தலா ஒரு புகார் என 6 புகார்கள் என மொத்தம் 25 புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் மீது  தகுந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Tags : Chennai ,District Election Officers , Case filed against 25 persons for violating election code of conduct in Chennai Corporation areas: Action by District Election Officers
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...