×

புஷ்பா வெற்றியால் மவுசு: அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் விருப்பம்

மும்பை: அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், அலியா பட் விருப்பம் தெரிவித்துள்ளனர். தெலுங்கில் உருவான புஷ்பா படம், பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் வெளியானது. இந்தியில் இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதித்தது. இதையடுத்து இந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு மவுசு கூடியுள்ளது. தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், விஜய் தேவரகொண்டா நடிக்கும் படங்களையும் பான் இந்தியா படங்களாக பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்கிறார்.

அதுபோல், அல்லு அர்ஜுனையும் இந்தியில் அறிமுகப்படுத்த முயற்சி நடக்கிறது. இந்நிலையில் புஷ்பா படத்தை பார்த்துவிட்டு, அல்லு அர்ஜுனின் ரசிகையாக மாறிவிட்டதாகவும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் பாலிவுட் நடிகை அலியா பட் கூறியுள்ளார்.


Tags : Pushpa ,Bollywood ,Allu Arjun , Mausu by Pushpa success: Bollywood actresses prefer Allu Arjun
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...