×

போர் மூளும் அபாயம் நெருங்கி விட்டதா? உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக நாடு திரும்ப உத்தரவு: எதுவும் நடக்கும் என பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்:  உக்ரைனில் வசித்து வரும், சுற்றுலா சென்றுள்ள அமெரிக்கர்களை உடனடியாக நாடு  திரும்பும்படி அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தனி நாடாக உள்ள உக்ரைன், தற்போது ரஷ்யாவின் மிகப்பெரிய எதிரியாக மாறி இருக்கிறது. இந்த நாட்டின் அண்டை நாடாக இருந்து கொண்டு, நேட்டோ அமைப்பில் இணைவதற்கு அது முயற்சி செய்து வருகிறது. இதற்கு வழி விட்டால், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் உக்ரைனில் முகாம்கள் அமைக்கும் அபாயம் உள்ளது.

இது, தனது நாட்டுக்கு ஆபத்தாகி விடும் என்பதால், உக்ரைனின் திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும், அந்த நாட்டின் மீது போர் தொடுக்கவும் தயாராகி விட்டார். இதற்காக, அந்த நாட்டை  சுற்றி ஒரு  லட்சம் வீரர்களையும், அதிநவீன ஆயுதங்களையும் குவித்துள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், நேட்டோ தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், உக்ரைனை தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யாவை எச்சரித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், செய்தி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் பைடன் அளித்துள்ள பேட்டியில்,‘உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டிய தருணம் வந்து விட்டது. உலகின் மிகப் பெரிய ராணுவத்தை  நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இந்த நிலைமை விரைவில் கட்டுப்பாடின்றி கைமீறி செல்லக் கூடும். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும் சூழல் நிலவுகிறது,’ என்று கூறியுள்ளார், பைடனின் இந்த எச்சரிக்கை, எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் நெருங்கி விட்டதை தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக கருதப்படுகிறது.

இந்தோனேசியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை
தென் சீன கடல் பகுதிக்கு முழுமையாக சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அதை சுற்றியுள்ள நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. சீனாவின் மிரட்டலில் இருந்து காப்பாற்ற, தனது நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், சீனாவால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்தோனேசியா கடற்படை, விமானப்படைகளை நவீனப்படுத்த, அதற்கு 35 எப்.15 ரக அதிநவீன போர் விமானங்களையும், ஆயுதங்களையும் விற்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.


Tags : Americans ,Ukraine ,Biden , Is the danger of war approaching? Order for immediate repatriation of Americans in Ukraine: Biden warns that nothing will happen
× RELATED நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட...