×

திமிரி பேரூராட்சியில் திமுக வேட்பாளர்களாக களம் காணும் தம்பதி

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. திமுக 12 வார்டுகள், விசிக ஒரு வார்டு, அதிமுக 5 வார்டுகள்,  பாஜ ஒரு வார்டு, நாம் தமிழர் கட்சி ஒரு வார்டு, சுயேச்சை வேட்பாளர்கள் பல்வேறு வார்டுகளில் 24 பேர் என மொத்தம் 44 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 11வது வார்டில்  நகர செயலாளர் ஜி.இளஞ்செழியன் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல், அவரது மனைவி இளஞ்செழியன் 2வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். திமிரி பேரூராட்சி தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,Thiri municipality , DMK in Thiri municipality
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்