×

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பிப்ரவரி 14ம் தேதி பதவியேற்கிறார்.!

சென்னை: வரும் பிப்.14-ஆம் தேதி முனீஸ்வர்நாத் பண்டாரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முனீஸ்வர்நாத் பண்டாரியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க முன்னதாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில்,அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வரும் பிப்.14-ஆம் தேதி முனீஸ்வர்நாத் பண்டாரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Tags : Muniswarnath Bandari ,Chief Justice ,High ,Court ,Chennai , Muneeswarnath Bandari will take over as the Chief Justice of the Chennai High Court on February 14.
× RELATED அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும்...