×

சிறுவயது முதலே மலைஏற்றத்தில் ஆர்வம்; பாலக்காடு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த நிலையில் வீடு திரும்பிய இளைஞர் பாபு பேட்டி

பாலக்காடு: கேரளாவில் மலையில் சிக்கி தவித்து பின்னர் மீட்கப்பட்ட பாபு மருத்துவமனையில் சிகிக்சை முடிந்து வீடு திரும்பினார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் மலம்புழா பகுதியில் மலையேற்றத்தின் போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிய பாபு, 45 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பாபுவின் உடல்நலம் தேறியதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுவயது முதலே மலையில் எறியுள்ளேன்.

தொடர்ந்து மலை ஏறும் பழக்கம் நீடித்து வந்தது. இதற்கு முன்பு சிறிய மலைகளில் ஏறியுள்ளேன். பெரிய மலையில் ஏற 3 முறை முயற்சி செய்தேன். இந்த முறை இறுதி வரை சென்றேன். அப்பொழுது, கால் வழுக்கி பாறை இடுக்கில் சிக்கி கொண்டேன். மலையில் வெற்றிகரமாக ஏறிய போதும், முழங்காலில் காயம் ஏற்பட்டதால் கீழே இறங்கமுடியாமல் போனதாக பாபு கூறினார். தன்னை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கும், ராணுவத்தினருக்கும், கேரள மாநில அரசுக்கும் பாபு நன்றி தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தன்னை எப்படியும் மீட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.                 


Tags : Palakkadu , Mountain, Boom, Curiosity, Palakkad, Treatment, Completion, Home, Babu, Interview
× RELATED பாலக்காடு அருகே சுருளி கொம்பன் யானை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்