சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு அஸ்வின் புகழாரம்

இந்திய அணியின் அனைத்துவித கிரிக்கெட்டிலும் சுழற்பந்துவீச்சில் அசத்திவரும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து கூறியதாவது: ஐ.பி.எல். தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி உள்ளார். கடந்த சீசன் உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 பட்டங்களை வென்று மகுடம் சூட்டுவதற்கு அணியை வெற்றிகரமாக வழி நடத்தியவர் டோனிதான். சிஎஸ்கே அணிக்காக அவர் பல சந்தர்ப்பங்களில் முக்கியமான பினிஷிங் ஷாட்கள் விளையாடி உள்ளார்.

இதன்மூலம் கடந்த காலங்களில் அணியின் மன உறுதியை உயர்த்த அவர் உதவியுள்ளார். அவரது கேப்டன்ஷிப் குறித்து பேசுபவர்கள் இதுபற்றி சரியாக கூறுவதில்லை.  ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே.வை மிகவும் நிலையான அணியாக மாற்றியவர் அவர். டோனியின் அமைதி மற்றும் கூட்டு அணுகுமுறையே சிஎஸ்கே அணி பல அதிசயங்களை நிகழ்த்த காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: