×

4 வது வார்டில் திமுக சார்பில் போட்டி பார்வதிபுரத்தில் வக்கீல் மகேஷ் வாக்குசேகரிப்பு

நாகர்கோவில் :  நாகர்கோவில் மாநகராட்சி 4 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வக்கீல் ஆர்.மகேஷ் பார்வதிபுரம் தெற்கு தெரு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது திமுக ஆட்சியின் திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்து கூறி நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளிலும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது வயது முதிர்ந்த வாக்காளர் ஒருவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். வாக்குசேகரிப்பின் போது திமுகவை சேர்ந்த முருகன், ஷேக்மீரான், தேவேந்திரன், ராம்பால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Vakil Makesh ,Bharvatipura ,Dimuka , Nagercoil: Nagercoil Corporation 4th Ward DMK contesting lawyer R.Makesh Parvathipuram South Street area house
× RELATED நீட் ரத்து கோரி வரும் 3ம் தேதி திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்