கிருஷ்ணகிரி 1வது வார்டில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க திமுகவுக்கு வாக்களியுங்கள்-வேட்பாளர் பரிதா நவாப் தீவிர பிரசாரம்

கிருஷ்ணகிரி : வார்டில் உள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்க்க திமுகவிற்கு வாக்களியுங்கள் என 1வது வார்டு திமுக வேட்பாளர் பரிதாநவாப் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி நகராட்சி 1வது வார்டில் திமுக சார்பில், கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், நகர்மன்ற முன்னாள் தலைவருமான பரிதா நவாப் போட்டியிடுகிறார். நகர திமுக செயலாளர் நவாப்பின் மனைவியான இவர், நகர மக்களுக்கு மட்டுமின்றி, மாவட்ட மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர். நேற்று தான் போட்டியிடும் 1வது வார்டில் வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் வாக்காளர்களிடையே பேசுகையில், ‘கிருஷ்ணகிரி நகராட்சி கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில், சின்ன ஏரியை தூர்வாரி, ₹3 கோடியே 36 லட்சம் மதிப்பில் நடைபாதை, பூங்கா, படகு இல்லம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. அதே போல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாக்கடை தூர்வாருதல், ஈஸ்வரன் கோயில் தெரு உள்ளிட்டட பகுதிகளில் சாலை அமைத்தல், கவீஸ்வரர் கோயிலுக்கு உயர் கோபுர மின்விளக்கு அமைத்தல் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சி, உள்ளாட்சியிலும் தொடர்ந்திட, கிருஷ்ணகிரி நகராட்சி பொலிவு பெற்றிட, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெற்றி பெற செய்ய வேண்டும். 1வது வார்டில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, உங்கள் சகோதரியாக போட்டியிடும் எனக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,’ என்றார். அப்போது நகர செயலாளர் நவாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: