×

ஊழல் செய்ததா பாஜக அரசு?: இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பிரான்சிடம் இருந்து குறைந்த விலைக்கு ரபேல் விமானங்களை வாங்கும் இந்தோனேசியா..!!

இந்தோனேசியா: ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு 36 ரபேல் விமானங்களை 66,650 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள நிலையில், 42 ரபேல் விமானங்களை 61,000 கோடி ரூபாய்க்கே வாங்க பிரான்ஸ் அரசுடன் இந்தோனேசியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 6 விமானங்கள் இப்போது வழங்கப்பட உள்ள நிலையில், ஏனைய 36 விமானங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 66,650 கோடி ரூபாய்க்கு 36 ரபேல் விமானங்களை ஒன்றிய அரசு வாங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஊழல் எதுவுமே நடைபெறவில்லை என ஒன்றிய பாஜக அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியா கொடுத்ததை விட குறைவான விலைக்கு, இந்தியா வாங்கியதை விட அதிகமான ரபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் அரசுடன் இந்தோனேசியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ரபேல் கொள்முதல் பற்றி ஊழல் புகார் உள்ள நிலையில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.


Tags : Government ,Indonesia ,Rafael ,France ,India , France, low price, Rafael flight, Indonesia
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்