×

ஜான்வி கபூரின் கை எலும்பு முறிவு

மும்பை: பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் கை எலும்பு முறிந்ததால் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டார்.ஸ்ரீதேவி, போனிகபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். சமீபத்தில் ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கையில் காயம் அடைந்தார். வலியால் துடித்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் அவரது கை எலும்பு முறிந்தது தெரிந்தது. உடனே அவருக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி என்ற இந்தி படத்தில் அவர் நடித்து வந்தார். கை எலும்பு முறிந்ததால் இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என ஜான்வி கூறியிருக்கிறார். தொடர்ந்து ஒரு மாதம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என குடும்பத்தார் கூறியுள்ளனர்.

Tags : Janvi Kapoor , Of Janvi Kapoor Arm fracture
× RELATED தோழியின் திருமண விழாவுக்காக 4 லட்சத்தில் தயாரான ஜான்வி கபூரின் ஆடை