×

‘ஆன்ட்டி போல் இருக்கீங்க’ விமர்சித்த நெட்டிசனை கண்டித்த நந்திதா

சென்னை: அட்டகத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா. விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல், விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது உடலமைப்பு குறித்து பேசிய நெட்டிசனின் கமென்ட்டிற்கு கோபமாக பதிலளித்துள்ளார் நந்திதா. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது படத்தை நந்திதா வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ஒரு நெட்டிசன், ‘தயவு செய்து உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலமைப்பை சரி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆன்ட்டி போல் இருக்கீங்க. ஒழுங்காக ஜிம் சென்று ஒர்க் அவுட் செய்யுங்கள்’ என தெரிவித்திருந்தார்.

இதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நந்திதா, ‘இப்படிப்பட்டவர்களால் நரகத்தில் இருப்பது போல இருக்கிறது. நான் ஒன்றும் பெண் கடவுள் இல்லை. நானும் ஒரு சாதாரண மனுஷி தான். எல்லோரையும் போல நானும் கஷ்டப்படுகிறேன். எப்படி இப்படி வார்த்தைகளை பேச முடிகிறது. நான் என் உடலை நேசிக்கிறேன். நான் இப்போது இருக்கும் விதம், நான் தோன்றும் விதம் எனக்கு பிடிக்கிறது’ என கோபத்துடன் பதிலளித்துள்ளார்.

Tags : Nandita , ‘Be like Aunty’ Nandita condemned the criticized Netizen
× RELATED மார்ச் 29ல் ரீரிலீசாகும் அழகி