×

கள்ளிக்குப்பம் தாங்கல் பூங்காவை சுற்றுலாத்தலமாக மாற்றி தருவேன்: திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் உறுதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம், 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ், நேற்று மாதனாங்குப்பம், கலெக்டர் நகர் ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.  அப்போது, பொதுமக்களிடம் வேட்பாளர் உஷா நாகராஜ் கூறுகையில், ‘அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் மாதனாங்குப்பத்தில் உள்ள ரேஷன் கடையை, செங்குன்றம் உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து, அம்பத்தூருக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.  

கள்ளிக்குப்பம் தாங்கல் பூங்காவை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்றி தருவேன். எனவே, எனக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டுகிறேன்,’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது, அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர்  எம்.டி.ஆர்.நாகராஜ், வட்ட செயலாளர்கள் சீ.லோகநாதன், மு.விஜயகுமார், நிர்வாகிகள் ப.பொற்செழியன், கே.ராஜ்குமார், பாபு இளஞ்செழியன், சு.மோகன்குமார், என்.குமாரவடிவேல், பாபு, லட்சுமி, எம்.டில்லிபாபு, கோவிந்தன், செல்வம், முத்து, சிவராமன், ஜெயபாலன், திருநாவுக்கரசு, கு.டில்லிபாபு, அமிர்தலிங்கம், பூ.நாகராஜ், தரணி, உஷா, முருகன் உள்பட கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags : Kallikkuppam Buffer Park ,DMK ,Usha Nagaraj , Cactus Buffer Park I will turn it into a tourist destination: DMK candidate Usha Nagaraj confirms
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...