கோவிட் தொற்றுக்கு பிறகு சென்னையில் தைராய்டு கண்நோய் பாதிப்பு 25% அதிகரிப்பு: அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் அஸ்வின் அகர்வால் தகவல்

சென்னை: கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு சென்னையில் தைராய்டு கண்நோய் 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறினார். இதுகுறித்து டாக்டர் அஸ்வின் அகர்வால்  கூறியதாவது: பார்வைத் திறனை அச்சுறுத்தும் பிரச்னைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான தைராய்டு கண் நோய் பாதிப்பு எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு சென்னையில் ஏறக்குறைய 25% அதிகரித்துள்ளது.

தாமதிக்கப்பட்ட நோயறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் காரணமாகவும் பெருந்தொற்று காலத்தின் போது அதிகரித்த மனஅழுத்த அளவுகளினாலும் கட்டுப்பாட்டின் கீழ் தைராய்டு அளவுகள் இல்லாத நிலை இந்த தைராய்டு பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவிற்கு கடுமையாக உயர்ந்திருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும். தைராய்டு கண் நோய் பார்வைத்திறனை அச்சுறுத்துவதாகவும், அதனை பலவீனப்படுத்துவதாகவும் இருக்கக்கூடும் தோற்றத்தை சீர்குலைக்கக் கூடிய நிலை இது கண்விழி விழிக்கோளத்திற்கு பின்புறத்திலுள்ள திசுக்களும் மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதியும் வீங்கி, வீக்கமடைந்ததாக கண்ணை தோன்றச் செய்யும். அருவருப்பூட்டும் தோற்றத்தை இது நோயாளிக்கு தரும். அயோடின் பற்றாக்குறையின் காரணமாக இது பொதுவாக ஏற்படுகிறது.

கண் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் அழகியல் சேவைகள் துறையின் தலைவர் டாக்டர் ப்ரீத்தி உதய் கூறியதாவது: நீண்ட நேரம் வாசிக்கும் போது இரட்டைப் பார்வை, கண்களை முழுமையாக தீவிர செயலாக்க நிலையில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளை லூப்ரிகன்ட்கள், ஸ்டீராய்டுகள், கதிரியக்க சிகிச்சை, நோய் எதிர்ப்புத்திறன் ஒடுக்கிகள் போன்றவற்றின் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். தீவிர செயலாக்கமற்ற காலகட்டத்தின்போது பெரும்பான்மையான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் எஸ்.சவுந்தரி கூறியதாவது: ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுமானால், தைராய்டு கண்நோயின் பெரும்பாலான அறிகுறிகளை குணப்படுத்தி முந்தைய இயல்பு நிலைக்கு கொண்டு வரமுடியும். இதன் மூலம் பெரும்பாலான நோயாளிகளுக்கு அவர்களது இயல்பான தோற்றத்தையும், செயல்பாட்டையும் மீண்டும் கொண்டுவர முடியும்.

Related Stories: