திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் கனிமொழி சூறாவளி பிரசாரம்: டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, நாஞ்சில் சம்பத்தும் களத்தில் குதித்தனர்

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் நாளை மாலை 4 மணி அரக்கோணம் தொகுதி, மாலை 7 மணி சோளிங்கர் தொகுதி, 13ம் தேதி மாலை 4 மணி ராணிப்பேட்டை தொகுதி, மாலை 7 மணி ஆற்காடு தொகுதி, 15ம் தேதி மாலை 4 மணி திருப்பத்தூர் தொகுதி, மாலை 7 மணி ஜோலார்பேட்டை தொகுதி, 16ம் தேதி மாலை 4 மணி வாணியம்பாடி தொகுதி, மாலை 7 மணி ஆம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 17ம் தேதி காலை 10 மணி முதல் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இன்று மாலை 3 மணி காஞ்சிபுரம் மாநகராட்சி, மாலை 6 மணி உத்திரமேரூர் தொகுதி, 13ம் தேதி மாலை 3 மணி ஆலந்தூர் தொகுதி, மாலை 6 மணி தாம்பரம் மாநகராட்சி, 14ம் தேதி மாலை 3 மணி தாம்பரம் மாநகராட்சி, மாலை 6 மணி பல்லாவரம் தொகுதி, 15ம் தேதி மாலை 3 மணி செங்கல்பட்டு நகராட்சி, மாலை 6 மணி மதுராந்தகம் தொகுதியிலும், 17ம் தேதி மாலை 3 மணி திருப்போரூர் தொகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ 12ம் தேதி (நாளை) மாலை 4 மணி சென்னை மாநகராட்சி, 13ம் தேதி காலை 10 மணி சென்னை மாநகராட்சி, மாலை 4 மணி சென்னை மாநகராட்சி, 14ம் தேதி காலை 10 மணி நாகர்கோவில் மாநகராட்சி, மாலை 6 மணி திருநெல்வேலி மாநகராட்சி, 15ம் தேதி காலை 10 மணி மதுரை மாநகராட்சி, மாலை 4 மணி திண்டுக்கல் மாநகராட்சி, 16ம் தேதி காலை 10 மணி சேலம் மாநகராட்சி, மாலை 4 மணி ஈரோடு மாநகராட்சி, 17ம் தேதி காலை 10 மணி முதல் கோவை மாநகராட்சியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., இன்று காலை 10 மணி ராஜபாளையம் நகராட்சி, மாலை 4 மணி திருநெல்வேலி மாநகராட்சி, 12ம் தேதி (நாளை) காலை 10 மணி நாகர்கோவில் மாநகராட்சி, மாலை 4 மணி கொல்லங்கோடு நகராட்சி, 15ம் தேதி காலை 10 மணி செங்கோட்டை நகராட்சி, மாலை 4 மணி தென்காசி நகராட்சி, மாலை 6 மணி சுரண்டை நகராட்சி, 16ம் தேதி காலை 10 மணி புளியங்குடி நகராட்சி, மாலை 4 மணி சங்கரன்கோவில் நகராட்சியிலும், 17ம் தேதி காலை 10 மணி முதல் தூத்துக்குடி மாநகராட்சியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இதேபோல திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, செய்தி தொடர்பு இணைச் செயலாளர் இரா.ராஜீவ் காந்தி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே, காணொலி வாயிலாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Related Stories: