×

களம்பூர் பேருராட்சியில் அதிமுக சார்பில் கணவன், மனைவி போட்டி

போளூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்குட்பட்ட களம்பூர் பேருராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக சார்பில் 5வது வார்டுக்கு கே.பி.சிவராஜின் மனைவி சி.கவுரிசிவராஜ் போட்டியிடுகிறார். 6வது வார்டுக்கு அதிமுக சார்பில் அவரது கணவர் எம்.எஸ்.கே.பி.சிவராஜ் போட்டியிடுகிறார்.  பி.சிவராஜ் ஏற்கனவே களம்பூர் பேருராட்சி தலைவராக இருந்துள்ளார். தற்போது களம்பூர் பேருராட்சியில் அதிமுக உறுப்பினர்கள்  அதிகமான வார்டுகளில் வெற்றி பெற்றால் அதிமுக சார்பில் மீண்டும் பேருராட்சி தலைவராக வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து நின்றுள்ளார்.

Tags : AIADMK ,Kalampur , Husband and wife contest on behalf of AIADMK in Kalampur municipality
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...