×

நாகை அருகே மாந்தோப்பில் கால் உடைந்து உயிருக்கு போராடிய மயில் மீட்பு

நாகை: நாகை அருகே கால் உடைந்த நிலையில் மாந்தோப்பில் உயிருக்கு கோராடிய மயிலை வனத்துறையினர் மீட்டனர். நாகை அருகே நாகூர் பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவரது வீட்டில் 50 க்கும் மேற்பட்ட மாமரங்கள் உள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மரங்களை பராமரிக்க மாந்தோப்பிற்கு மஸ்தான் வந்தார். அப்போது கால் முறிந்த நிலையில் ஒரு ஆண் மயில் பறக்க முடியாமல் மரத்தின் கீழ் நின்று உயிருக்கு போராடியதை பார்த்தார்.

இதுகுறித்து அவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு மாவட்ட வன உயிரின அலுவலர் யோகேஷ்குமார்மீனா, வனசரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் ஆனந்தீஸ்வரன், வன காப்பாளர்- பாக்யராஜ் ஆகியோர் வந்து மயிலை மீட்டனர். தொடர்ந்து நாகை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை முடிந்த பிறகு மயிலை வனப்பகுதிக்குள் கொண்டுவிடப்படும் எனக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Manthop ,Naga , Naga, Manthopil, broken leg, peacock, recovery
× RELATED மாமல்லபுரம் அருகே பரபரப்பு மாந்தோப்பில் திடீர் தீ: போலீசார் விசாரணை