×

தண்ணீர் இருந்தும் குளிக்க முடியவில்லை கண்மாயை ஆக்கிரமித்த செடிகள்: சுத்தம் செய்ய மக்கள் கோரிக்கை

திருவாடானை: திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் ஊரின் மத்தியில் பெரிய பாசன கண்மாய் உள்ளது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் அதிக மழை பெய்ததால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. விவசாயம் முடிந்துவிட்ட நிலையில் தண்ணீர் மீதமாக உள்ளது. இந்த தண்ணீரில் சுண்டி கீரை என்னும் வகை செடி முழுவதையும் ஆக்கிரமித்து படர்ந்து கிடக்கிறது. இதனால் தண்ணீரின் நிறம் மாறி காட்சியளிக்கிறது. கண்மாயில் இறங்கி குளித்தால் உடல் முழுவதும் ஒருவித அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் குளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து திருவொற்றியூர் கிராமமக்கள் கூறுகையில், இங்கு போதிய அளவில் நிலத்தடி நீர் இல்லாததால் குளிக்க இந்த கண்மாய் தண்ணீரைதான் நம்பி உள்ளோம். அதிக அளவில் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. கண்மாயில் சுண்டி கீரை செடி படர்ந்து கிடக்கிறது. இந்த செடியினால் தண்ணீர் நிறம் மாறிவிட்டது. மேலும் இதில் இறங்கி குளித்தால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிக அளவில் தண்ணீர் இருந்தும் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் இருந்ததை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி உதவி செய்தனர். அதுபோல் இந்த ஆண்டும் இந்த செடியை அகற்றித் தந்தால் உதவியாக இருக்கும் என்றனர்.

Tags : Kanmai , Water, eyelid, plant, clean, request
× RELATED பொன்னமராவதி அருகே கொன்னைக் கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம்